தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் செப்டம்பருக்குள் தேர்தலை நடத்த உச்சநீதி மன்றம் உத்தரவு…

Must read

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15க்குள் தேர்தலை நடத்த உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

பல வருட இழுபறிக்கு பின்னர், உச்சநீதிமன்ற உத்தரவுபடி கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் இரு கட்டங்களாக தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.  தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் கடந்த ஆண்டு (2020)  ஜனவரியில் பொறுப்பேற்றுக்கொண்டனர். அப்போது, புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில் சிக்கல் எழுந்ததால், அந்த மாவட்டங்களில் தேர்தல் தள்ளி வைக்கப்ப‘ட்டது.

பின்னர் கொரோனாதொற்று பரவல் ஊரடங்கு காரணமாக தேர்தல் நடத்துவதில் சிக்கல் நீடித்து வந்தது. இது தொடர்பான உச்சநீதிமன்ற வழக்கின் விசாரணையின்போது, கொரோனாவை காரணம் காட்டி அப்போதைய எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு இழுத்தடித்து வந்தது.

இந்த நிலையில், இதுதொடர்பான வழக்கு இன்று  உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது உள்ளாட்சி தேர்தல் நடத்த nமலும் 6 மாதம் அவகாசம் வேண்டும் என்ற மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதனால் கோபமடைந்த நீதிபதிகள், எவ்வளவு காலம் அவகாசம் கேட்பீர்கள் என கூறி, தமிழகஅரசின் கோரிக்கையை நிராகரிப்பதாக தெரிவித்தனர். மேலும், உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களுக்கு செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்ததி முடிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

More articles

Latest article