சென்னை: 9 மாவட்ட மறைமுக ஊரக ஊராட்சித் தேர்தல் முடிவுகளை மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத 9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் இரு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று கடந்த 12ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் 90% வெற்றிகளை திமுகவே கைப்பற்றி சாதனை படைத்துள்ளது

இதையடுத்து, ஒன்றிய தலைவர், துணை தலைவர், ஊராட்சி துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு, இன்று மறைமுக தேர்தல் 22ந்தேதி நடைபெற்றது. இதில் பதவிகளை பிடிக்க குதிரை பேரம் நடைபெற்று வந்தது. இதில் பெரும்பாலான இடங்களை திமுகவே கைப்பற்றியது.

இந்த நிலையில்,  நடந்து முடிந்த 9 மாவட்ட மறைமுக ஊரக ஊராட்சித் தேர்தல் முடிவுகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி 9 மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகளையும் திமுக கைப்பற்றி உள்ளது. மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பதவிகளில் திமுக 6 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் விடுதலை சிறுத்தைகள் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.<

73 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளில் திமுக 68 இடங்களிலும், அதிமுக, மதிமுக  தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

73 இடங்களுக்கு நடந்த ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் தேர்தலில் திமுக 62 இடங்களிலும் காங்கிரஸ் 3 இடங்களிலும் அதிமுக ஒரு இடத்திலும், சுயேட்சைகள் 2 இடத்திலும்  வெற்றி பெற்றனர்.