சென்னை:  ஜார்கண்டில் இருந்து 84.99 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் ரயில் சென்னை வந்தடைந்துள்ளது. இது தமிழக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிகிறது.

தமிழத்தில்  கொரோனாவின் இரண்டாவது அலை வீரியம் பெறத் தொடங்கிய நேரத்தில் ஆட்சி கட்டிலில் அரியனை ஏறிய மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு தொற்று பரவலை கட்டுப்படுத்த தீவிரமாக பணியாற்றி வருகிறது. நோயாளிகளுக்கு தேவையான  ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஆக்சினேற்றவர்கள் வரவழைக்கப்பட்டன. மேலும் மத்தியஅரசிடம் இருந்தும் ஆக்சிஜன் ஒதுக்கீடு அதிகரிக்க அழுத்தம்  காடுத்து, தற்போது  தமிழகத்திற்கான ஒதுக்கீட்டை 519 மெட்ரிக் டன்னாக பெற்றுள்ளது.

தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான பற்றாக்குறையை போக்க, ஆக்சிஜடின பெறுவதிலும், சேமித்து வைப்பதிலும் தமிழகஅரசு தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி, ஜார்கண்ட்  மாநிலம் பொக்காரோவில் இருந்து 84.99 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் ஏற்றிய கண்டெய்னர் ரயில்  நள்ளிரவு  சென்னை வந்தடைந்தது. தற்போது இந்த ரயில்,  சென்னை திருவொற்றியூர் கான்கார் கண்டெய்னர் யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளத. இவை லாரிகள் மூலம்  தேவைப்படும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவதற்கான நடவடிக்கைகளை தொடங்கப்பட்டு உள்ளது.