இந்தியாவில் மொத்தம் 2.2 லட்சம் ஏடிஎம்கள் உள்ளன. புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களை விநியோகிக்கும் வகையில் நாடுமுழுவது 82,500 ஏடிஎம் இயந்திரங்கள் இதுவரை மறுகட்டமைப்பு (Recalibration) செய்யப்பட்டுள்ளன. இந்தப் பணி முழுவீச்சில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதற்கு முன்னர் வெறும் 100 ரூபாய்களாக வைத்தபோது ஒரு எடிஎம்மில் வெறும் 5 லட்சம் மதிப்புள்ள பணத்தை மட்டுமே வைக்க இயலும். இதனால் பணம் வெகுவிரைவில் தீர்ந்துவிடும். ஆனால் இப்போது மறுகட்டமைப்பு செய்யப்பட்டபின் 50 முதல் 60 லட்சம் ரூபாய்கள் வரை நிரப்பலாம் என்று தெரிகிறது.
ஏடிஎம் இயந்திரங்களை மறுகட்டமைப்பு செய்யும் பணியில் ரிசர்வ் வங்கி, வங்கிகள் மற்றும் பணத்தை ஏடிஎம்மில் கொண்டு போய் நிரப்பும் லாஜிஸ்டிக் நிறுவனங்கள் மும்மரமாக இறங்கியுள்ளன. ஒவ்வொரு நாளும் நாடு முழுவதும் 12,000 முதல் 14,000 ஏடிஎம் இயந்திரங்கள் வரை மறுகட்டமைப்பு செய்யப்படுகின்றன.