திருவண்ணாமலை: கார்த்திகை மகா தீபத்தையொட்டி, நேற்று ஒரே நாளில் அண்ணாமலையார் மலைமீது ஏற்றப்பட்ட மகா தீபத்தை சுமார் 8 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலை வருகை தந்து தரிசித்தனர் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இந்த தீபம் 11 நாட்கள் தொடர்ந்து எரியும் சிறப்பு வாய்ந்தது.
காத்திகை தீபத்தின் முக்கிய நிகழ்வாக திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் நேற்று மாலை ஏற்றப்பட்டது. முன்னதாக நேற்று அதிகாலை அண்ணாமலை யார் கோவில் வளாகத்தில் இன்று காலைசிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில், அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாவட்ட ஆட்சியர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து, கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று மாலை 6 மணிக்கு கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.
அப்போது அங்கு குழுமியிருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரோ கோஷம் எழுப்பி மகா தீபத்தை பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதைதொடர்ந்து, அண்ணாமலையார் கோயில் நுழைவாயிலில் தீபம் ஏற்றப்பட்டது. தீபத்தை காண சுமார் 8 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்துள்ளனர் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
திருவண்ணாமலை தீபத்தை பார்க்க வரும் பக்தர்களுக்கு உதவுவதற்காக 83 சிறப்பு பூத்கள் அமைக்கப்பட்டுள்ளன. மகா தீபத்திற்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650 கிலோ நெய் பயன்படுத்தப்படுகிறது. தீபம் ஏற்றப்படும் திரிக்காக 100 மீட்டர் காடா துணி பயன்படுத்தப்பட்டுள்ளது. தீபத்தை ஏற்ற நாள்தோறும் 2 கிலோ கற்பூரம் பயன்படுத்தப்படுகிறது. தீபம் ஏற்றப்படும் தீப கொப்பரையானது செம்பினால் செய்யப்பட்டது. கொப்பரையில் ஏற்றப்படும் மகா தீபம் 11 நாட்கள் எரியும் சிறப்பு வாயந்தது.
மகா தீபத்தையொட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
2668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது… வீடியோ
நாளை மகாதீபம்: திருவண்ணாமலையில் தீபகொப்பறையை மலையின் மீது ஏற்றும் பணி தொடங்கியது