சென்னை: தமிழ்நாட்டில் 79 புதிய மருத்துவமனைகள் விரைவில் மக்களின் பயன்பாட்டு வரும் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்து உள்ளர்.

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் இன்று முதல்முறையாக டெங்கு ஒழிப்பு,தடுப்பு மற்றும் விழிப்புணர்வுக்காக மூன்று துறையினர் ஒருங்கிணையும் முக்கிய கலந்தாய்வுக் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது,  தமிழகத்தில் 79 புதிய மருத்துவமனைகள் கட்ட வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தி இருந்தார். அதன்படி, மருத்துவமனைகள் கட்டப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலையில்,  60-க்கும் மேற்பட்ட இடங்களில்  கட்டிட பணிகள் நிறைவு பெற்று இருக்கிறது. இந்த மருத்துவமனைகளுக்கு தேவையான உபகரணங்கள் வாங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவை முழுமை பெற்றதும், திறக்கப்படும். மிக விரைவில் 79 புதிய மருத்துவமனைகள் மக்களின் பயன்பாட்டுக்கு வரவுள்ளது எனவும்  தெரிவித்துள்ளார்.