சென்னை: மகாத்மா காந்தியின் 76-வது நினைவு தினத்தையொட்டி சென்னையில் உள்ள மகாத்மா காந்தியின் உருவப்படத்துக்கு ஆளுநர் ஆர். என். ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மகாத்மா காந்தியின் 76வது நினைவு தினத்தை ஒட்டி நாடுமுழுவதும் அவரது நினைவலைகள் இன்று அனுசரிக்கப்படுகிறது.  இந்த நிலையில், சென்னை கடற்கரையில் இருந்த மகாத்மா காந்தி சிலை, மெட்ரோ பணிக்காக அங்கிருந்து தற்காலிகமாக அகற்றப்பட்டு,   எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில்  வைக்கப்பட்டு உள்ளது.

இன்ற காந்தியின் நினைவுநாளை யொட்டி, எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியடிகள் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் அருகே வைக்கப்பட்டுள்ள காந்தியின்  திருவுருவ படமும் அலங்கரித்து வைக்கப்பட்டு உள்ளது. இந்த உருவப்படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதனை தொடர்ந்து எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில்  செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள “காந்தியும் உலக அமைதியும்” என்ற புகைப்படக் கண்காட்சியினை முதலமைச்சர் மற்றும் ஆளுநர் ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர்.

காந்தியும் உலக அமைப்பும் என்ற தலைப்பில் வைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியில் 90 புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. காந்தியடிகளின் வரலாறு முழுமையாக சித்தரிக்கும் விதமாக அமைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் பார்வையிட்டனர். மேலும் காந்தியடிகள் தொடர்பான குறிப்புகள் மற்றும் செய்தித்தாள்கள் அவருடைய புகைப்படங்கள் அடங்கிய செல்ஃபி பகுதியும் வைக்கப்பட்ட உள்ளது.

இந்த புகைப்பட கண்காட்சியை பார்வையிடும் விதமாக பொதுமக்களுக்கு ஒரு வாரம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.