சென்னை: நாட்டின் 73-வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு சென்னை ராஜாஜி சாலையிலுள்ள போர் நினைவுச்சின்னத்தில் மலர் வளையம் வைத்து வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து  காமராஜர் சாலையில் அமைக்கப்பட்டிருந்த விழா மேடையில், தேசியக் கொடியை  ஏற்றி வைத்தார். முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

நாட்டின் 73வது  குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் குடியரசு தின விழா சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில்  கொரோனா பாதுகாப்புகளுடன் நடைபெற்றது. சென்னை கடற்கரை சாலையில் முவர்ண கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி. ஏற்றி வைத்தார்  ஆளுநராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக தமிழ்நாட்டில் தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி. ஏற்றி வைத்தார்.  இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள், அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

சரியாக 8மணிக்கு தொடங்கிய இந்த விழா சுமார் 8.45 மணி அளவில் தேசியகீதத்துடன் முடிவடைந்தது. விழாவின்பேது தேசிய கொடி ஏற்றியதும், ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது. இதையடுத்து, மேடைக்குச் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். இதேபோன்று காவல் துறை யினரின் அணிவகுப்பு மரியாதையும் ஆளுநர் ஏற்றார்.   இதை ஆளுநர், முதல்வர் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள், பொதுமக்கள்  கண்டுகளித்தார்.

அதைத்தொடர்ந்து அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. டெல்லி அணிவகுப்பில் நிராகரிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் சென்னையில் அணிவகுத்துச் சென்றன. அரசு இசைக்கல்லூரி மாணவ, மாணவிகளின் இசை நிகழ்ச்சியுடன் அலங்கார ஊர்திகள் அணிவகுத்துச் சென்றன.

இந்த அணிவகுப்பில் முதல் வாகனமாக வேலுநாச்சியாரின் அலங்கார ஊர்தி இடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து மருது சகோதரர்கள், பாரதியார் சிலைகள் இடம் பெற்றன. அலங்கார ஊர்திகளில் வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகு முத்துக்கோன், உள்ளிட்டோரின் சிலைகள் அடங்கிய அலங்கார ஊர்திகள் அணிவகுத்துச்சென்றன. அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் பெரியார், ராஜாஜி, காமராஜர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உள்ளிட்டோரின் சிலைகளும் இடம்பெற்றன

இதனைத் தொடர்ந்து, வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கங்கள் உள்ளிட்ட சில பதக்கங்களை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் குடியரசு தினவிழாவில் பங்கேற்பார்கள். ஆனால் இந்த ஆண்டு, கொரோனா கட்டுப்பாடுகள் காரண மாக பொதுமக்கள் நேரில் வர வேண்டாம் என்று அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனால், பொதுமக்கள் கூட்டம் காணப்படவில்லை.

குடியரசு தினவிழா கொண்டாட்டத்தையொட்டி சென்னை, காமராஜர் சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. உதவி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என மொத்தம் 6,800 காவல் அதிகாரிகள் மற்றும் போலீசார் மூலம் சிறப்பு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.