சென்னை: 73-வது குடியரசு தினவிழாவையொட்டி, சென்னை கடற்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  வீரதீரச் செயல்களுக்கான விருதுகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். அண்ணா பதக்கம், காந்தியடிகள் காவல் பதக்கம் . கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம், சிறந்த விவசாயிகளுக்கான விருது உள்ளிட்ட பல்வேறு பதக்கங்களை முதல்வர் வழங்கினார்.

நாட்டின் 73-வது குடியரசு தினத்தையொட்டி தமிழ்நாட்டில், சென்னை காமராஜர் சாலை காந்தி சிலை அருகே ஆளுநர் ஆர்.என்.ரவி மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து, டெல்லி அணிவகுப்பில் நிராகரிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் சென்னையில் அணிவகுத்துச் சென்றன. அதை ஆளுநர் மற்றும் முதல்வர் ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள், அதிகாரிகள் கண்டுகளித்தனர்.

அதைத்தொடர்ந்து, வீரதீரச் செயல்களுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றது. விருதுக்கு தேர்வானவர்களுக்கு  முதலமைச்சர் ஸ்டாலின் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

வீர தீர செயல் புரிந்தவர்களுக்கு அண்ணா பதக்கம் 8 பேருக்கு வழங்கப்பட்டது. அதன்படி, சென்னை மயானம் ஒன்றில், உயிருக்கு போராடியவரை தோளில் சுமந்து சென்று காப்பாற்றிய டி.பி.சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. இதேபோன்று திருவொற்றியூரில் கட்டட விபத்தின்போது அச்சமின்றி காப்பாற்றும் பணியில் ஈடுபட்ட தனியரசுக்கு விருது வழங்கப்பட்டது.

கோவை வனக்காவல்நடை உதவி மருத்துவர் அசோகன், மதுரை அருகே விபத்தில் சிக்கியவர்களை மீட்ட கார் ஓட்டுநர் முத்துக்கிருஷ்ணன் என்பவருக்கு விருது.

திருச்சி மணப்பாறை அருகே நீரில் மூழ்கிய சிறுமியை காபடரிய தேதுலுக்கம்ப்பட்டியைச் சேர்ந்த 4 ஆம் வகுப்பு சிறுவன் லோகித்திற்கு 2022 ஆம் ஆண்டின் வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்படுகிறது.

திருப்பூரில்,நீரில் மூழ்கிய 5 சிறுமிகளை காப்பாற்றிய சொக்கநாதன் மற்றும் சுதா ஆகியோருக்கு 2022 ஆம் ஆண்டின் வீர தீரச் செயலுக்கான அண்ணா விருது வழங்கப்படுகிறது.

இவர்களுக்கு வீர தீரச் செயலுக்கான விருதுடன் ரூ.1 லட்சம் காசோலையுடன் விருதும் வழங்கப்பட்டது.

அதைததொடர்ந்து, 5 பேருக்கு காந்தியடிகள் விருது வழங்கப்பட்டது, கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தியதற்காக காவலர்கள் 5 பேருக்கு காந்தியடிகள் விருதினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் சக்தி, முசிறி எஸ்.ஐ. சிதம்பரம் உள்ளிட்டோருக்கு காந்தியடிகள் விருது வழங்கப்பட்டது.

73-வது குடியரசு தினவிழா: தமிழ்நாட்டில் முதன்முறையாக முதல்வர் முன்னிலையில் கொடியேற்றினார் கவர்னர் ரவி… புகைப்படங்கள்…