காத்மண்டு

நேற்று நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 70 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.4 ஆகப் பதிவாகி இருந்தது. நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. அச்சமடைந்த மக்கள் குடியிருப்புகளை விட்டு அலறியடித்து வெளியே ஓடினர்.

நிலநடுக்கத்தால் ருகும் மேற்கு பகுதியில் 36 பேர் உயிரிழந்தனர். பலி எண்ணிக்கை உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது.  மேலும் ஜஜர்கோட் பகுதியில் 34 பேர் உயிரிழந்து உள்ளனர். பலர் காயமடைந்து அவர்களில் படுகாயமடைந்த சிலர் சுர்கெத் பகுதிக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

நேற்று நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் நிலநடுக்க பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு இரங்கலை வெளிப்படுத்தி உள்ளார். இந்த நிலநடுக்கம் இந்தியாவிலும் டில்லி-என்.சி.ஆர்., உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய வட இந்தியப் பகுதிகளிலும் உணரப்பட்டது.