க்னோ

இன்றைய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியுட்ன் நெதர்லாந்து அணி மோத உள்ளது.

இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் நடக்கும் 34-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி, நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.

ஆப்கானிஸ்தான் அணி ஹஸ்மத்துல்லா ஷகிடி தலைமையில் 6 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 3 தோல்வி என்று 6 புள்ளிகளுடன் இருக்கிறது. வங்காள தேசம், இந்தியா, நியூசிலாந்து அணிகளிடம் தோல்வி கண்ட ஆப்கானிஸ்தான், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, முன்னாள் சாம்பியன்களான பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு அதிர்ச்சி அளித்து அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கிறது. எஞ்சிய 3 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் அந்த அணி அரைஇறுதிக்குள் முதல்முறையாக அடியெடுத்து வைக்க முடியும்.

நெதர்லாந்து அணி ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையில்6 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி (தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசத்துக்கு எதிராக), 4 தோல்வியுடன் (பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா அணிகளிடம்) அரைஇறுதி வாய்ப்பில் லேசாக ஒட்டிக் கொண்டிருக்கிறது. அந்த அணியில் பேட்டிங்கில் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ், சைபிரான்ட் இங்கில்பிரிட்டும், பந்து வீச்சில் பால் வான் மீக்ரென், ஆர்யன் தத், வான்டெர் மெர்வும், ஆல்-ரவுண்டர்களாக காலின் அகேர்மான், லோகன் வான் பீக், பாஸ் டி லீட்டும் வலுசேர்க்கிறார்கள்.

இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்:-

ஆப்கானிஸ்தான்:

ரமனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜட்ரன், ரஹமத் ஷா, ஹஸ்மத்துல்லா ஷகிடி (கேப்டன்), அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், இக்ராம் அலிகில் அல்லது நஜ்புல்லா ஜட்ரன், முகமது நபி, ரஷித் கான், முஜீப் ரகுமான், நவீன் உல்-ஹக் அல்லது நூர் அகமது, பசல்ஹக் பரூக்கி.

நெதர்லாந்து:

விக்ரம்ஜித் சிங், கேம்ஸ் ஓ டாவ்ட், வெஸ்லி பரேசி, காலின் அகேர்மான், ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), பாஸ் டி லீட், இங்கில்பிரிட், லோகன் வான் பீக், ஷாரிஸ் அகமது, ஆர்யன் தத், பால் வான் மீக்ரென்.