சென்னை கோபாலபுரத்தில் 1,000 இருக்கைகள் கொண்ட முற்றிலும் குளிரூட்டப்பட்ட குத்துச்சண்டை அரங்கம் அமைக்கப்பட உள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதற்கான அடிக்கல்லை நேற்று நாட்டினார்.

2 லட்சம் சதுர அடி மைதானத்தில் 52,000 சதுர அடியில் இரண்டு பாக்சிங் ரிங்-குடன், ஜிம், வீரர்கள் அறை மற்றும் இதர வசதிகளுடன் தயாராக உள்ளது.

7.78 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ள இந்த அரங்கிற்கான செலவுத் தொகையில் ரூ. 5 கோடியை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் மீதித் தொகையை ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ. எழிலனின் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மின்சார விளக்கு ஒளிவெள்ளத்தில் மின்னப்போகும் இந்த மைதானத்தில் கிரிக்கெட் உள்ளிட்ட மற்ற விளையாட்டுப் போட்டிகளுக்கும் தேவையான வகையில் வடிவமைக்கப்பட உள்ளது.