சென்னை: நாளை மறுநாள் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டிடி,  தமிழகம், புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் இன்று இரவு 7 மணியுடன்  ஓய்ந்தது.

தமிழகம் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில்,  நாளை மறுதினம் (ஏப்ரல் 6ந்தேதி) தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் ஒரேகட்டமாக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அத்துடன் இறுதி மற்றும் 3வது கட்ட வாக்குப்பதிவும், மேற்கு வங்க மாநிலத்தில் 3வது கட்ட வாக்குப்பதிவும் நடைபெற உள்ளது.

இந்த மாநிங்களில் இன்று (4ந்தேதி) இரவு 7 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்துள்ளது. வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பெட்டிகளை அனுப்பும் பணிகளையும், வாக்குச்சாவடி அதிகாரிகளையும் அனுப்பும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளும்,  நாளை சட்டமன்ற தேர்தல் வாக்கு பதிவு ஒரே கட்டமாக நடைபெறுகிறது. புதுச்சசேரி மாநிலத்தில் 30 தொகுதிகளும், கேரள மாநிலத்தில் 140 தொகுதிகளும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அத்துடன், அஸ்ஸாம் மாநிலத்தில் மொத்தமுள்ள 126 தொகுதிகளுக்கு  ஏற்கனவே 2 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துவிட்ட நிலையில், நாளை 3வது கட்டம் மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு 40 தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது. 294 தொகுதிகளைக் கொண்ட மேற்குவங்க மாநிலத்தில்   3வது கட்டமாக  31 தொகுதிகளுக்கு  வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு, 5 மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் 300 கம்பெனி துணை ராணுவப் படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்தல் பணியில் 4 லட்சத்து 50 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுகின்றனர்