கொல்கத்தா: அலுவல் காரணங்களுக்காக அல்லாது, அரசியல் பேரணிகளில் கலந்துகொள்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, விவிஐபி விமானத்தைப் பயன்படுத்துகிறார் என்று அவர்மீது தேர்தல் கமிஷனில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

மேற்குவங்க மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி, மோடியின் மீது இந்தப் புகாரை அளித்துள்ளார். இதுதொடர்பாக தேர்தல் கமிஷன் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

“பிரதமர், தனது அலுவல் சார்ந்த விஷயங்களுக்கு செல்லும்போது, அவரின் பாதுகாப்பு காரணங்களுக்காக இத்தகைய விவிஐபி விமானத்தைப் பயன்படுத்துவது என்பது வேறு. ஆனால், தனது கட்சியின் அரசியல் பேரணியில் கலந்துகொள்வதற்காக இத்தகைய விமானத்தைப் பயன்படுத்துவது ஏற்புடையதன்று. இது மற்றொரு அரசியல் தலைவருக்கு ஏற்புடைய செயல் அன்று.

ஏனெனில், பிரதமரின் இத்தகைய செயலால், நான் முன்பே திட்டமிட்ட எனது பயணம் ரத்தானது. ஏனெனில், பிரதமரின் இந்தப் பயணம் குறித்து நான் அறிந்திருக்கவில்லை” என்றுள்ளார் ஆதிர் ரஞ்சன்.