க்னோ

உத்தரப்பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோ சிறையில் 63 கைதிகளுக்கு எச் ஐ வி பாசிடிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில் உத்தர பிரதேசத்தின் லக்னோ சிறையில் உள்ள கைதிகளிடம் சுகாதார பரிசோதனைகள் நடந்தன. செப்டம்பரில் இருந்து பரிசோதனைகளுக்கான உபகரணங்கள் கிடைக்கப் பெறாமல் இருந்ததனால், பரிசோதனை செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இறுதியாக, டிசம்பரில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இத பரிசோதனையில் சிறையில் உள்ள 63 கைதிகளுக்கு எச்.ஐ.வி. பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் சக கைதிகள் மற்றும் அதிகாரிகளிடையே அச்சம் ஏற்படுத்தி உள்ளது.  எச் ஐ வி தொற்று பாதிக்கப்பட்ட கைதிகளில் பலர், போதைப் பொருட்களுக்கு அடிமையான தனிநபர்கள் ஆவர்.

சிறை நிர்வாகம் அவர்கள் சிறை வளாகத்திற்கு வெளியே, தொற்று ஏற்பட்ட ஊசிகளைப் பயன்படுத்தி, அதனால் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர் என்று கூறியுள்ளது. மேலும் சிறைக்கு வந்த பின்னர், எந்த கைதிக்கும் எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

லக்னோவில் உள்ள மருத்துவமனை ஒன்றில், பாதிப்பு ஏற்பட்ட அனைத்து கைதிகளுக்கும் சீராக சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. லக்னோ சிறை நிர்வாகம், தொடர்ந்து செயல்பட்டு, தொற்று ஏற்பட்ட கைதிகளின் உடல் நலனை கண்காணித்து வருகிறது.

சிறையில் அதிக எண்ணிக்கையில் கைதிகள் எச் ஐ வி தொற்றுடன் காணப்படுவது, ஒட்டுமொத்த சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு சூழலில் வருத்தம் ஏற்படச் செய்துள்ளது.  , தொற்று ஏற்பட்டதற்கான அடிப்படை காரணம் பற்றி முழு அளவில் அதிகாரிகள் விசாரணை செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.,