டில்லி

த்திய அமைச்சர் மேக்வால் பொது சிவில் சட்டம் சட்ட ஆணைய பரிசீலனையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

பொதுச் சிவில் சட்டம் திருமணம், விவாகரத்து, நிலம், சொத்து மற்றும் பரம்பரை சட்டங்கள் ஆகியவற்றில் மாநிலத்தில், எந்தவித மதவேற்றுமையும் இன்றி அனைத்து குடிமக்களுக்கும் சீரான ஒரு சட்ட வடிவம் கிடைக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது.  மத்திய அரசு இந்த சட்டத்தை விரைவில் அமல்படுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

போர்த்துகீசிய ஆட்சி காலத்தில் இருந்து கோவாவில் பொது சிவில் சட்டம் நடைமுறையில் உள்ளது., பொது கட்டுமானம் சட்டத்தின் இறுதி வரைவுக்கு உத்தரகாண்ட் அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. ஆகவே, அந்த மாநிலத்தின் சட்டசபையில் தாக்கல் செய்யப்படுவதற்கான வழியேற்பட்டு உள்ளது.

இன்று இதற்கான சிறப்பு 4 நாட்கள் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெறுகிறது.  இங்கு பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டால், நாட்டில் சுதந்திரத்திற்கு பின்னர் இதனை நடைமுறைப்படுத்திய முதல் மாநிலம் என்ற பெருமையை, பா.ஜ.க. ஆளும் உத்தரகாண்ட் பெறும்.

பொது சிவில் சட்டம் பற்றி மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கூறும்போது, சட்ட ஆணையத்தின் கீழ் அது பரிசீலனையில் உள்ளது என்றும் ஆலோசனை நடைமுறையானது தொடர்ந்து வருகிறது என்றும் கூறியுள்ளார்.