சிதம்பரம்

சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 56 உதவி பேராசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 கடந்த 2011 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்  உதவி பேராசிரியராக பணியில் சேர்ந்தவர்கள் போதுமான கல்வித் தகுதி இல்லாமல் பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே இது குறித்து 56 உதவிப் பேராசிரியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.  போதிய கல்வித் தகுதி இல்லாமல் பணியில் சேர்ந்ததாக அவர்களைப் பணி நீக்கம் செய்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் பதிவாளர் சிங்காரவேல், ஆட்சி மன்றக் குழு முடிவின் படியும், உயர் கல்வித்துறையின் அறிவுறுத்தலின் படியும் இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அதன்படி தற்போது பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் 18 பேருக்கும், வெளிக்கல்லூரிகளில் பணியாற்றி வரும் 38 பேருக்கும் பணி நீக்க உத்தரவுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.