குருங் கோமே

முகமூடி அணிந்த சுமார் 500 பேர் வாக்குச் சாவடி அலுவலர்களை தாக்கி மின்னணு வாக்கு இயந்திரத்தை திருடி உள்ளனர்.

அருணாசல பிரதேசம் கோலோரியாங் மக்களவை தொகுதியில் உள்ள குரங்கோமே மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வாக்குப்பதிவு நடந்தது.   இந்த வாக்குப்பதிவின் போது ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன.   இந்த  புகார்களை விசாரித்த தேர்தல் ஆணையம் இன்று மறு வாக்குப் பதிவு நடத்த உத்தரவிட்டது.

அதை ஒட்டி நேற்று வாக்குச் சாவடி அலுவலர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்துடன் சிஆர்பிஎஃப் வீரரக்ள் காவலுடன் சென்றுக் கொண்டிருந்தனர்.   அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் இவர்களை வழி மறைத்துள்ளது.   சுமார் 500 பேர் கொண்ட இந்த கும்பலில் உள்ள அனைவரும் முகமூடி அனிந்து இருந்தனர்.    அவர்கள் ஏகே 47 உள்ளிட்ட சக்தி வாய்ந்த துப்பாக்கிகளால் சுட்டுள்ளனர்.

காவலுக்கு வந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் பதிலுக்கு சுட்டால் இரு தரப்பிலும் உயிர்சேதம் ஏற்படலாம் என நினைத்து சுடாமல் இருந்துள்ளனர்.    காவல்படை வீரர்களை விட அதிக எண்ணிக்கையில் இருந்த  அந்த கும்பல் அலுவலர்களை தாக்கி அவர்களிடம் இருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தூக்கிக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டனர்.

காவல்துறையினர் அவர்களை தேடும் பணியை நடத்தி வருகிறது.