தாநகர்

ருணாசலப் பிரதேச ஆளும் கட்சியான தேசிய மக்கள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் திராங் அபோ தனது ஆறு ஆதரவாளர்களுடன் கொல்லப்பட்டுள்ளார்.

அருணாசலப் பிரதேச மாநிலத்தில் தற்போது தேசிய மக்கள் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.   இம்மாநிலத்தின் மேற்கு கோன்சா சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் திராங் அபோ இந்த கட்சியை சேர்ந்தவர் ஆவார்.   தற்போது நடைபெற்று முடிந்துள்ள சட்டப்பேரவை தேர்தலில் இதே தொகுதியில் திராங் அபோ போட்டியிட்டு வருகிறார்.

இன்று அவர் அருணாசலப் பிரதேச மாநிலம் திரப் மாவட்டத்தில் உள்ள போகாபானி கிராமத்தில் நடந்த துப்பாக்கி தாக்குதலில் கொல்லப்பட்டார்.   இந்த தாக்குதலில் திராங் அபோவுடன் அவருடைய பாதுகாவலர் உள்ளிட்ட ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.   இந்த தாக்குதலை நாகாலாந்து நேஷனல் சோஷலிஸ் கவுன்சில் என்னும் இயக்கம் நடத்தி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது/

இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தேசிய மக்கள் கட்சி தலைவரும் மேகாலயா முதல்வருமான கன்ராட்  சங்மா  இந்த தாக்குதலை நடத்திய இயக்கத்தின் மீது பிரதமர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  தெரிவித்துள்ளார்.  அத்துடன் தாம் திராங் அபோவின் கொலை செய்தியால் அதிர்ச்சி அடைந்துள்ளதகவும் அவர் குடும்பத்துக்கு அனுதாபம் தெரிவித்துக் கொள்வதாகவும் அறிவித்துள்ளார்.