ஈரானில் 10 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து

Must read

அபாடான்:
ரானின் தெற்கு நகரமான அபாடானில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.

அபாடானில் உள்ள 10 அடுக்கு கட்டிடம் நேற்று திடீரென இடிந்து விழுந்து நொறுங்கியது.

இதில், இடிபாடுகளில் 80-க்கும் மேற்பட்டவர்கள் சிக்கியுள்ளனர். விபத்து குறித்து தகவலறிந்த மீட்பு படையினர், மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

மேலும் இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

More articles

Latest article