அமெரிக்கா தொடக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 18 குழந்தைகள் உள்பட 21 பேர் உயிரிழப்பு

Must read

டெக்சாஸ்:
மெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 18 குழந்தைகள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர் கதையாகி வருக்கின்றன. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் உவால்டே பகுதியில் தொடக்கப் பள்ளிக்கூடம் ஒன்றுக்குள் 18 வயதுள்ள மர்ம நபர் திடீரென துப்பாக்கியுடன் நுழைந்து மர்ம நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் பிஞ்சு குழந்தைகள் 15 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 3 ஆசிரியர்களையும் அந்த மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்தார்.

இந்த சம்பவத்தில் 18 வயதான துப்பாக்கி சூடு நடத்திய நபரும் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தகது.

More articles

Latest article