சென்னை: ஊழல் வழக்கு காரணமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, 5 நாள் அமலாக்கத்துறை காவலைத் தொடர்ந்து இன்று மீண்டும் புழல் சிறைக்கு செல்கிறார்.
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமைச்சா் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் 5 நாள்கள் அனுமதி அளித்து ஆகஸ்டு 7-ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினா் அன்றைய தினம் இரவே (7ந்தேதி திங்கள்கிழமை) காவலில் எடுத்து, சென்னை சாஸ்திரி பவனில் உள்ள அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து 5 நாட்கள் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஏராளமான கேள்விகள் தொடுக்கப்பட்ட நிலையில், பல கேள்விகளுக்குபதில் கூறவில்லை என்று கூறியதாக தகவல்கள் தெரிவிக்கினற்ன. மேலும் பல கேள்விகளுக்கு பதில் பெற்றுள்ளதாகவும் கூறப்படகிறது. இந்த விசாரணை முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது 5 நாள் காவல் இன்று மாலையுடன் முடிவுக்க வருகிறது.
இதன் காரணமாக, இன்று மாலை 3 மணிக்கு செந்தில் பாலாஜியை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினா் ஆஜா்படுத்தி,புழல் சிறையில் அடைக்கின்றனா்.
அதேவேளையில் செந்தில் பாலாஜியிடம் மேலும் சில நாள்கள் விசாரணை செய்ய அனுமதி கேட்டு அமலாக்கத்துறை புதிதாக ஒரு மனுவை தாக்கல் செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.