டில்லி:

3வது அணி அமைப்பது தொடர்பாக உ.பி. மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவை தெலுங்கான முதல்வர் சந்திரசேகரராவ் இன்று சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

டுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாரதியஜனதா, காங்கிரசுக்கு மாற்றாக 3வது அணி அமைக்க மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கான முதல்வர் சந்திரசேகர ராவ் போன்றோர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இது சம்பந்தமாக சமீபத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தும், திமுக செயல்தலைவர் ஸ்டாலினு டனும் சந்திரசேகரராவ் சென்னை வந்து ஆலோசனை நடத்தினார். மேலும், பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் உள்பட பல மாநில கட்சிகளுக்கு சந்திரசேகர் ராவ் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் இன்று உ.பி. முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான  அகிலேஷ் யாதவை இன்று  சந்திரசேகரராவை சந்தித்து பேசுகிறார். அப்போது  2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங், பாஜக அல்லாத 3வது அணி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.