சென்னை: தேசதுரோக வழக்கில் யுடியூபர் மாரிதாசை சென்னை உயர்நீதிமன்றம் விடுவித்த நிலையில், 3வதாக மேலும் ஒரு வழக்கில் அவரை காவல்துறை யினர் கைது செய்துள்ளனர். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர் கொடுத்த புகாரின்பேரில் காவல்துறை  மாரிதாசை இன்று கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த வாரம், முப்படை தலைமை தளபதி ஹெலிகாப்டர் விபத்து குறித்து, டிவிட் பதிவிட்டதாக கூறி, பிரபல யுடியூபர் மாரிதாஸை அவரது வீட்டில் வைத்து காவல்துறையினர் தேசதுரோக வழக்கில் கைது செய்தனர். இந்த வழக்கில் காவல்துறையினரின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்த உயர்நீதிமன்றம், அவர்மீதான வழக்கை ரத்து செய்தது. இதையடுத்து, நியூஸ்18 சேனர் பல மாதங்களுக்கு முன்பு, கட;ந 2020-ல் பதியப்பட்ட வழக்கில்கொடுத்த புகாரில் தற்போது மாரிதாஸை கைது செய்து, 27ந்தேதி வரை சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கின் விசாரணை விரைவில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், தற்போது மேலும் ஒரு வழக்கில் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.  நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்த காதர் மீரான் என்பவர் கடந்த 04.04.2020ல்  என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், மேலப்பாளையம் காவல் நிலையத்தில் 292A, 295 A, 505 ( 2), It act 67 என 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் மாரிதாஸ் இன்று  கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட யூடியூபர் மாரிதாஸ் இன்று நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார். சென்னை புழல் சிறையில் இருந்து நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நெல்லை காவல்துறையினர் சென்னையில் இருந்து நெல்லைக்கு யூடியூபர் மாரிதாஸை அழைத்து வருகிறார்கள்.

யுடியூபர் மாரிதாஸ் வழக்குகள் மற்றும் கைதுக்கு பயந்து ஒளிந்து கொள்ளாமலும், தலைமறைவாக இல்லாமலும் தனது கருத்தை பதிவிட்டுக் கொண்டிருந்த நிலையில், சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது திடீர் ஞானோதயம் பெற்றதுபோல, தமிழக காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளது மீண்டும் விமர்சனங்களுக்குள்ளாகி வருகிறது.