டெல்லி:

லைநகர் டெல்லியில் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், 38வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது.  இதில் பல்வேறு பொருட்களுக்கு வரி உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிஎஸ்டி வரி வருவாய் ஒரு லட்சம் கோடியை தாண்டும் என மத்தியஅரசு எதிர்பார்த்த நிலையில், இந்த இரண்டு ஆண்டுகளில் 3முறை மட்டுமே வரி வசூல் 1லட்சம் கோடியை தாண்டி உள்ளது .கடந்த மாதம் ஜிஎஸ்டி வரியால் 1 லட்சத்து மூவாயிரத்து 492 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது.

கடந்த சில மாதங்களாக ஜிஎஸ்டி வரி வருவாய் குறைந்து வருவதால்,  மத்திய அரசுக்கு நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பல்வேறு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விகிதத்தை உயர்த்துவது குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பாக அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொள்கிறார்.

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின், மத்திய அரசு திட்டமிட்ட வரி வசூல் இலக்கை இன்னும் எட்டவில்லை என்று கூறப்படுகிறது.