அரக்கோணம்,

த்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அரக்கோணத்தில் அமைந்துள்ள மத்திய தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மைய விழாவில் கலந்துகொண்டார்.

அப்போது நாட்டின் பாதுகாப்பு துறை உள்பட அனைத்து துறைகளிலும் மகளிருக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவதாக கூறினார்.

நேற்று வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே நகரிக்குப்பத்தில் உள்ள மத்திய தொழிற் பாதுகாப்புப்படை பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற வீரர்களின் நிறைவு நாள் விழா, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார்.

இதற்காக ராணுவ விமானம் மூலம் அரக்கோணம் வந்த ராஜ்நாத் சிங்குக்கு  மத்திய தொழிற் பாதுகாப்புப்படை பயிற்சி வளாகத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

அதைத்தொடர்ந்து சிறப்பாக பயிற்சி நிறைவு செய்த வீரர், வீராங்கனைகளுக்கு கோப்பைகளை வழங்கி பாராட்டிய அவர், வீரர்களின் சாகச நிகழ்ச்சிகளையும் பார்வையிட்டார். இந்த ஆண்டு 1047 வீரர் வீராங்கணைகள் பயிற்சி பெற்றுள்ளனர்.

பின்னர் விழாவில் பேசிய ராஜ்நாத்சிங், 2030ம் ஆண்டுக்குள் இந்தியா மிகப்பெரிய பொருளாதார சக்தியாக மாறும் என்றும்,  மத்திய அரசின் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.