சென்னை: தமிழகத்திற்கு 33.19 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் 12 வது ஆலோசனைக் கூட்டம்  இன்று காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.கல்தார் தலைமை தாங்கினார். மேலும்,  தமிழகம், புதுச்சேரி, கேரளா மற்றும் கர்நாடகம் ஆகிய 4 மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறைச் எயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழி நுட்ப தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தமிழகஅரசு சார்பில், கர்நாடகம் தர வேண்டிய தண்ணீரை திறந்து விடுமாறு வலியுறுத்தப்பட்டது. மேலும், கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஜூன், ஜூலை மாதத்திற்கான தண்ணீரை காவிரியில் திறக்க கர்நாக அரசுக்கு ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி,  தமிழகத்திற்கு 33.19 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட வேண்டும என  கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மைஆணையம் உத்தரவிட்டு உள்ளது.