சேலம்: தமிழ்நாட்டில் காலாவதியான 32 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என  தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 29 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்த நிலையில்,  மக்களவை தேர்தல் மற்றும் வாகன ஓட்டிகளின் எதிர்ப்பு காரணமாக மத்தியஅரசு சுங்கக்கட்டண உயர்வை வாபஸ் பெற்றுள்ளது.

நாடு முழுவதும் உள்ள சுங்கக்கசாடிகள்,  மத்தியஅரசின் தேசிய நெடுஞ்சாலை அமைச்சக கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. அந்த அமைச்சகமே நெடுஞ்சாலைகள் ஆணையம் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் சுங்க கட்டணம் வசூலிக்க அனுமதி அளித்து வருகிறது.  அதன்படி நாடு முழுவதும் உள்ள 4 வழிச்சாலை, 6 வழிச்சாலை, 8 வழிச்சாலை என புதிய சாலைகள் போடப்பட்டுள்ளது. இப்படி போடப்பட்ட ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 145 கிலோ மீட்டர் தூரம் தேசிய நெடுஞ்சாலைகளில் 1,228 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த சாலைகளை தொடர்ந்து பராமரிக்கும் வகையில், இந்த சாலைகளை பயன்படுத்தும், வாகன ஓட்டிகளிடமிருந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் மொத்தம் 5 ஆயிரத்து 381 கிலோ மீட்டர் தொலைவில் நெடுஞ்சாலைகள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டும் 49 சுங்கச்சாவடிகள் உள்ளன. ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் 5 சதவீதத்திலிருந்து 10 சதவீதம் வரை உயர்த்தி வசூலிக்கப்படுகிறது.

இந்த சுங்கச்சாவடிகளில் ஒன்றிய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி 1992ல் போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008ல் போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

மேலும், 15ஆண்டுகளை கடந்த சுங்கக்சாவடிகள் மூடப்பட வேண்டும் என்று மத்தியஅரசின் விதியாகும். ஆனால், தமிழ்நாட்டில்  மொத்தம் உள்ள 49 சுங்கச் சாவடிகளில் 32 சுங்கச்சாவடிகள் 15 ஆண்டுகளை கடந்து காலாவதியாகி உள்ளது. இதனால், மத்திய நெடுஞ்சாலைத்துறை விதிகளின் படி, இந்த சுங்கக்சாவடிகள் மூடப்பட  வேண்டும்.  ஆனால், சுங்கச்சாவடிகை மூடாமல் விதிகளை மீறி கட்டம் வசூலிக்கப்பட்டு வருகிறது. மேலும், இதற்கு பதிலாக மேலும் பல இடங்களில் புதிய சுங்கக்சாவடிகளை அமைத்து வருகிறது. இது மக்களிடைய கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் காலாவதியான 32 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்றும், சேலத்தில் விதிகளை மீறி 60 கி.மீ. எல்லைக்குள் அமைக்கப்பட்டுள்ள 2 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.