சென்னை: சென்னையில் இயக்கப்பட்டு வரும் புறநகர் மின்சார ரயில் சேவையில்  32 மின்சார ரயில்களின் சேவை பரமரிப்பு பணி காரணமாக மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே விடுத்துள்ள அறிக்கையில், மாற்றப்பட்டுள்ள ரயில் சேவைகளின் விவரங்களையும், எந்தெந்த ரயில் சேவைகள் மாற்றப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

சென்னை எம்.ஜி.ஆர்.சென்டிரல்-சூலூர்பேட்டை இடையே காலை 5.20 மணி, 7.45 மணிக்கும், மதியம் 1.15 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில் சேவை இன்று, 27-ந்தேதி மற்றும் 30-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

சூலூர்பேட்டை-நெல்லூர் இடையே காலை 7.50 மணி, 10 மணிக்கும், மதியம் 3.50 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில் சேவை இன்று, 27-ந்தேதி மற்றும் 30-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

நெல்லூர்-சூலூர்பேட்டை இடையே காலை 10.15 மணிக்கும், மாலை 6.15 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில் சேவை இன்று, 27-ந்தேதி மற்றும் 30ந்தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

சூலூர்பேட்டை-சென்டிரல் இடையே மதியம் 12.35 மணிக்கும், மாலை 6.35 மணிக்கும், இரவு 8.45 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில் சேவை இன்று, 27-ந்தேதி மற்றும் 30-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

கூடூர்-சூலூர்பேட்டை இடையே மாலை 5.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் சேவை இன்று, 27-ந்தேதி மற்றும் 30-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.