டில்லி

ண மோசடி செய்துவிட்டு 31 தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பண மோசடி செய்த தொழிலதிபர்கள் நடவடிக்கைகளுக்கு பயந்து வெளிநாடுகளுக்கு தப்பி ஓடுவது தற்போது மிகவும் அதிகரித்து வருகிறது.       பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா சுமார் ரூ.9000 கோடிக்கு மேல் வங்கிக் கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பிச் சென்றார்.    லண்டனில் தஞ்சம் புகுந்துள்ள அவரை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வர கடும் முயற்சி மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ.12000 கோடிக்கு மேல் முறைகேடு செய்ததாக வைர வர்த்தகர் நிரவ் மோடி மற்றும் அவர் உறவினரும் கூட்டாளியுமான மெகல் சோக்சி ஆகியோர் மீது புகார் எழுந்தது.    இது குறித்து சிபிஐ விசாரணையை தொடங்கும் நேரத்தில் இருவரும் குடும்பத்துடன் நாட்டை விட்டு தப்பி ஓடி விட்டனர்.   அவரை தேடி மீண்டும் இந்தியா கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து மக்களவையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் அக்பர், “பண மோசடி காரணமாக சிபிஐ பல தொழிலதிபர்கள் மீது விசாரணை மேற்கொண்டுள்ளது.   அதில் 31 தொழில் அதிபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று விட்டனர்.   அவர்களை பிடிக்க சிபிஐ நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.   மத்திய அரசும் மோசடி செய்வோரின் சொத்துக்களை பறிமுதல் செய்து அதனை ஏலம் விடுவது மூலம் கடனை ஈடு கட்டும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது.   அத்துடன் ரூ. 50 கோடிக்கு மேல் சொத்துள்ளவர்கள் தங்காளது பாஸ்போர்ட் விவரங்களை உடனடியாக மத்திய அரசுக்கு அறிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது”  என தெரிவித்துள்ளார்.