ஜெனீவா:  உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 19.79 கோடியையும், குணமடைந்தோர் 17.88 கோடியையும் தாண்டி உள்ளது.

உலக சுகாதாரத்துறை நிறுவன தரவுகளின்படி,  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்  பாதிப்பு  198,010,773 ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில் தடுப்பூசி செலுத்தும் பணி அதிகரிக்கப்பட்டு உள்ளதால், நோயில் குணமடைவோர் அதிகமாகவும், இறப்பு விகிதம் குறைந்துள்ளது.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 17 கோடியே 89 லட்சத்து 07 ஆயிரத்து 004 பேர் குணமடைந்துள்ளனர்.

இதுவரை உலக அளவில் கொரோன வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 42 லட்சத்து 24 ஆயிரத்து 121 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதைய நிலையில் உலகம் முழுவதும் கொரோனா தொற்றுபாதிப்பு காரணமாக  1,48,59,208 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில்  87,553 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.