டில்லி

ரியல் எஸ்டேட் கட்டுப்பாடு மற்றும் முன்னேற்ற சட்டம் (ரிரா)வின் கீழ் இணைந்துள்ள மாநிலங்கள் குறித்து மத்திய அரசு உச்சநிதிமன்றக்கு தகவல் அளித்துள்ளது.

ரிரா என ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைக்கப்படும் ரியல் எஸ்டேட் கட்டுப்பாடு மற்றும் முன்னேற்ற சட்டம் வீடு வாங்குவோர் நலனுக்காக அமிக்கபட்டுள்ளது.  இந்த சட்டத்தின் மூலம் மாநில அரசு வீடு வாங்குவோர் தெரிவிக்கும் குறைகள் மற்றும் புகார்கள் குறித்து விசாரிக்கும்.   இந்த சட்டத்தின் தற்போதைய நிலை குறித்து மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் விசாரித்துள்ளது.

இதற்கு பதில் அளித்த வீட்டு வசதி அமைச்சகம் ”இந்த சட்டத்தின் கீழ் இதுவரை யூனியன் பிரதேசம் மற்றும் மாநிலங்கள் இணைந்து 30 மாநிலங்கள் இணைக்கப்பட்டுள்ளன.  அத்துடன் இந்த சட்டத்தின் கீழ் 42726 வீடு கட்டும் திட்டங்களும் 33906 ரியல் எஸ்டேட் முகவர்களும் பதிவு செய்துள்ளன.

அத்துடன் இந்த சட்டத்தின் கீழ் 22 மாநிலங்களில் தீர்ப்பாயம் அமைத்துள்ளன.  இந்த தீர்ப்பாயங்களில் இது வரை 20000 வழக்குகள் தீர்வு செய்யப்பட்டுள்ளன.  ரிரா சட்டத்தின் கீழ் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 21000 திட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் 5751 திட்டங்களும், உத்திரப் பிரதேசத்தில் 2673 திட்டங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த சட்டத்தின் கீழ் காஷ்மீர் மாநிலம் வராது. மேற்கு வங்கம் தனது மாநிலத்தில் ஏற்கனவே இதைப் போல் ஒரு சட்டம் அமைத்துள்ளது.” என தெரிவித்துள்ளது.