சென்னை: தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 4,512 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், தலைநகர் சென்னையில், 275 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளல் 4,512 பேர் புதிதாக கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 24,75,190 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மட்டும் 118 பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளனர். இதுவரை 32,506 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 6,013 பேர் தொற்றிலிருந்து குணம் அடைந்துள்ளனர். இதுவரை 24,03,349 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போதைய நிலையில் 39,335 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் நேற்று 275 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இதுவரை சென்னையில் 5,32,272 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளனர். இதன் காரணமாக இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 8,172 ஆக உயர்ந்துள்ளது. 414 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,20,793 பேர் குணம் அடைந்துள்ளனர்.
தற்போது சென்னையில் 3,307 பேர் சிகிச்சையில் உள்ளனர். மாநிலத்திலேயே அதிகபட்சமாக கோவையில் 563 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவைக்கு அடுத்தபடியாக ஈரோட்டில் 493 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ‘ சேலம் மாவட்டத்தில் 302 பேரும், திருப்பூரில் 281 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 2.48 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் – 1.45 கோடி பேர்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் (29.06.2021) இன்று 20,320 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
மண்டலம் வாரியாக பாதிப்பு விவரம்: