டெல்லி:
முதுநிலை பட்டப்படிப்பான எம்சிஏ படிப்பு காலம் 3 ஆக இருந்து வந்ததை, 2 ஆண்டுகளாக குறைத்து   அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் (AICTE)  அறிவித்துள்ளது. அத்துடன் பிளஸ்-2 வில் கணிதம் படிக்க வேண்டியதும் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
எம்.சி.ஏ. முதுகலை படிப்பு (PG) தற்போது மூன்று ஆண்டுகளாக இருந்து வருகிறது. 2020-2021-ம் கல்வி ஆண்டில் இருந்து இரண்டு ஆண்டுகளாக குறைக்கப்படும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே இது தொடர்பாக ஏஐசிடிஇ (அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில்)    2020-21 பொறியியல் மாணவா் சோ்க்கை அனுமதி வழிகாட்டு நடைமுறையில் அறிவிப்பை  கடந்த பிப்ரவரி மாதமே ஏஐசிடிஇ வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போது  எம்.சி.ஏ. படிப்பு 2 ஆண்டாக குறைக்க  பல்கலைக்கழக அனுமதி குழுவின் ஒப்புதல் பெறப்பட்டதாகவும், அதையடுத்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அத்துடன் சில நெறிமுறைகளையும் வெளியிட்டு உள்ளது.
அதன்படி எம்.சி.ஏ. படிக்க விரும்புபவர்கள்,  பிசிஏ, பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்திருக்க வேண்டும். பி.காம், பி.எஸ்.சி., பி.ஏ., படித்தவர்கள் 12-ம் வகுப்பில் கட்டாயம் கணிதம் பாடம்  எடுத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.