செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் கோவில் நிலங்களில் இயங்கிய 3 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளார்.

File pic

இந்து அறநிலையத் துறை சட்டப்படி  கோவிலுக்குச் சொந்தமான நிலங்களில் இறைச்சி கடைகள், மதுபானக் கடைகள், போதைப் பொருட்கள் சம்பந்தப்பட்ட அனைத்தும் இயங்க தடை உள்ளது.    எனவே தமிழகம் முடுவதும் கோவில்களுக்கு சொந்தமான இடங்களில் இயங்கும் டாஸ்மாக் மதுக்கடைகள், இறைச்சிக்கடைகள் ஆகியவற்றை அகற்ற ஆட்சியர்களுக்கு உத்தரவு இடப்பட்டது.

இதையொட்டி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சிய  ராகுல்நாத் மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்தார்.  அந்த ஆய்வில் செங்கல்பட்டில் உள்ள ஏகாம்பர நாதேஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் 3 அரசு டாஸ்மாக் கடைகள் இயக்கி வருவது கண்டறியப்பட்டது  அவை கடை ந் 4005, 4008, மற்றும் 4015 ஆகியவை ஆகும்.

இதையொட்டி இந்த 3 டாஸ்மாக் கடைகளையும் உடனடியாக மூட செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.  தற்போது இந்த 3 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.   இந்த கடைகள் இயங்க பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத இடங்களைத் தேர்வு செய்து கொடுத்தால்  மீண்டும் இவை இயங்க வாய்ப்பு அளிக்கப்படலாம் எனக் கூறப்பட்டுள்ளது.