சென்னை

ன்று முதல் பபாசி இணைய தளத்தில் சென்னை புத்தகக் கண்காட்சி டிக்கட்டுகள் விற்பனை செய்யப்பட உள்ளது.

ஒவ்வொரு வருடம் ஜனவரி முதல் வாரம் சென்னை புத்தகக் கண்காட்சி நடப்பது வழக்கமாகும்.   இம்முறை புத்தக் கண்காட்சி குறித்து அறிவிப்புகளை பபாசி அமைப்பினர் வெளியிட்ட நிலையில் கொரோனா மூன்றாம் அலை தாக்குதல் கடுமையானது.  எனவே புத்தகக் கண்காட்சி ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து பபாசி அமைப்பினர் சென்னை புததக் கண்காடசிய நடத்த அனுமதிக்குமாறு தமிழக முதல்வருக்குக் கோரிக்கை விடுத்தனர்.   இதையொட்டி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை செய்து புத்தகக் கண்காட்சி நடத்த அனுமதி அளித்தார்.

அதன்படி சென்னை நந்தனத்தில் உள்ள ஒய் எம் சி ஏ மைதானத்தில் பிப்ரவரி 16 முதல் புத்தகக் கண்காட்சி நடைபெறும் என பபாசி அமைப்பு அறிவித்தது.  இந்த புத்தகக் கண்காட்சியை முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.  இந்த புத்தகக் கண்காட்சிக்கு நுழைவுக் கட்டணமாக ரு.10 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புத்தகக் கண்காட்சியில் 500 பதிப்பாளர்கள் கலந்துக் கொள்கின்றனர்.  மொத்தம் 800 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.  இந்த புத்தகக் கண்காட்சிக்கான டிக்கட்டுகள் பபாசி இணைய தளத்தில் இன்று முதல் விற்கப்பட உள்ளதாக பபாசி அமைப்பு அறிவித்துள்ளது.