இந்தியா, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் என்று அண்டை நாடுகளாக உள்ள 3 துணைக்கண்ட நாடுகளிலும், தற்போது கிரிக்கெட் தொடர்பாக ஒரு ஒற்றுமை நிலவுகிறது.

கிரிக்கெட் என்பது மிகப் பிரபலமான விளையாட்டாக திகழும் இந்த நாடுகளில், தற்போது சுற்றுப்பயணம் வந்திருக்கும் அணிகளை கவனிக்க வேண்டியுள்ளது.

இந்தியாவிற்கு ஐரோப்பிய கண்டத்திலிருந்து இங்கிலாந்து அணியும், பாகிஸ்தானிற்கு, ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து தென்னாப்பிரிக்க அணியும், வங்கதேசத்திற்கு வடஅமெரிக்க கண்டத்திலிருந்து விண்டீஸ் அணியும் சுற்றுப்பயணம் வந்துள்ளன.

இதில், கவனிக்க வேண்டியது என்னவெனில், அருகருகே உள்ள 3 அண்டை நாடுகளுக்கும், வெவ்வேறு கண்டங்களைச் சேர்ந்த அணிகள் வந்துள்ளன. இலங்கை, ஆப்கானிஸ்தான் போன்ற அணிகள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது! இந்த சம்பவம், ஒரேநேரத்தில் நிகழ்ந்துள்ளதுதான் ஆச்சர்யமளிக்கும் ஒன்றாக உள்ளது.