டெல்லி:
கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தினக்கூலிகள், அமைப்புசாரா தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் ஏழை மக்கள், விவசாயிகளுக்கு தேவையாஉதவிகளை செய்ய மறுத்து வரும் மத்திய பாஜக அரசு, தொடர்ந்து புலம்பெயர் தொழிலாளர்களை வாட்டி வதைத்து வருகிறது.

ஊரடங்கால் தங்களது வாழ்வாதாரததை இழந்த புலயம்பெயர் தொழிலாளர்கள் ஏராளமானோர் அடுத்தவேளை உணவுக்கே வழியின்றி, சாலை மார்க்கமாக தங்களது சொந்த ஊர்களுக்கு நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர். சிலர் தங்களிடம் உள்ள இருச்சக்கர வாகனம், சைக்கிள்கள் மூலம், மேலும் பலர் லாரிகள், டேங்கர்கள் போன்ற வாகனங்கள் மூலம் அபாயகரமான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 1ந்தேதி முதல் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சிறப்பு ரயிலை இயக்கி வரும் மத்தியஅரசு, அவ்வப்போது ரயில் சேவைகளையும் ரத்து செய்து விடுகிறது. மேலும், ரயில் டிககெட் கட்டணத்தையும் உயர்த்தி உள்ளது.
ஊரடங்கால் தங்களிடம் இருந்த கொஞ்ச நஞ்ச பணத்தையும் இழந்து, கையில் பணமில்லாமல் தத்தளித்து வரும் புலம்பெயர் தொழிலாளர்கள் எப்படியாவது சொந்த ஊருக்கு சென்றே ஆக வேண்டும் என்ற பிடிவாதம் காரணமாக பல வகைகளில் பணத்தை சேர்த்து சொந்த ஊரை நோக்கி சென்று வருகின்றனர்.
இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலம் முர்ஷாபாத் பகுதியைச்சேர்ந்த ஒரு குடும்பத்தினர், மும்பையில் இருந்து தங்களது சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். அவர்கள் ரயிலில் பயணம் செய்ய பலமுறை முயற்சித்தும், டிக்கெட் கிடைக்காததால்,  அவர்கள் ஊருக்கு திரும்ப,  முர்ஷாபாத்தில் அவர்கள் குடும்பத்தினரிடம் இருந்த மாடுகளை விற்று பணம் வரவழைத்து, விமானம் மூலம் ஊருக்கு திரும்ப முயற்சி மேற்கொண்டனர்.
அதன்படி விமானத்தில் மும்பையில் இருந்து கொல்கத்தாவுக்கு 25ந்தேதி (நேற்று) விமானத்தில் செல்ல 22ந்தேதியே ரூ.  30 ஆயிரத்து 600 பணம் கட்டி டிக்கெட் பதிவு செய்திருந்தனர்.
ஆனால், நேற்று திடீரென அந்த குறிப்பிட்ட விமான சேவை  ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் செய்தவறியாக திகைத்த அவர்கள், விமான கட்டணத்திற்கான பணத்தை திரும்பி தரக்கோரி விமான நிலையத்தில் வேண்டுகோள் விடுத்தனர்.
ஆனால், விமான நிறுவனம் பணத்தை திருப்பி கொடுக்க மறுத்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்திக்சிங் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பாரா? என சமுக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.