சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனுஷின் 44-வது படத்தை தயாரிக்கவுள்ளதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. இப்படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ளார்.
இந்தப் படத்தின் நாயகிகளாக 3 பேர் நடிக்கவுள்ளனர். அதற்காக ப்ரியா பவானி சங்கர், நித்யா மேனன், ஹன்சிகா ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
நீண்ட இடைவெளிக்கு பின் இந்தப் படத்தில் தனுஷ் – அனிருத் ஜோடி மீண்டும் இணைந்து பணிபுரிகின்றனர்.