புதுடெல்லி:

கடந்த 2011-12 முதல் 2017-18 வரை கிராமப் புறங்களில் 3.2 கோடி பண்ணைத் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாக, தேசிய மாதிரி சர்வே அலுவலகம் என்எஸ்எஸ்ஓ தெரிவித்துள்ளது.


இது குறித்து என்எஸ்எஸ்ஓ வெளியிட்டுள் மதிப்பீட்டு அறிக்கையில், 2011-12-ல் விவசாய தற்காலிக தொழிலாளர்களின் பெருமளவு வருவாய் 10% குறைந்தது.

பண்ணை விவசாயத்தை மட்டுமே நம்பியிருந்த 15 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். கடந்த 2011-12-ல் பண்ணை மற்றும் பண்ணை சாராத கிராமப்புற தற்காலிக தொழிலாளர் எண்ணிக்கை 7.3% குறைந்துள்ளது.

2011-12-ல் 3 கோடி கிராமப் புற ஆண் தொழிலாளர்களும், 2017-18-ல் 28.6 கோடி கிராமப் புற ஆண் தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளனர்.
தேசிய மாதிரி சர்வே அலுவலக அறிக்கைக்கு தேசிய புள்ளியியல் ஆணையம் 2018-ல் ஒப்புதல் அளித்தும், மத்திய அரசு இன்னும் வெளியிடவில்லை.

இந்த அறிக்கையை வெளியிடாததற்கு எதிர்ப்பு தெரிவித்து, புள்ளியியல் ஆணைய தலைவர் பிஎன்.மோகனம் மற்றும் உறுப்பினர் ஆகியோர் பதவியிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.