சென்னை: கொரோனா பாதிப்பில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்த தலைநகர் சென்னையில் 77 நாட்களுக்கு பிறகு, தற்போது பாதிப்பு குறையத் தொடங்கி உள்ளது. சுமார் 77 நாட்களுக்கு பிறகு, 3ஆயிரத்துக்கும் குறைவானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 33,361 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை மொத்த கொரோனா பாதிப்பு 19,78,621 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு ஒரே நாளில் 474 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 22,289 ஆக உயர்ந்துள்ளது . தமிழகத்தில் தற்போது கொரோனாவுக்கு 3,13,048 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் . ஒரே நாளில் 30 ,063 பேர் குணமடைந்துள்ளனர் . இதன்மூலம் மொத்தமாக 16,43,284 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் .

சென்னையில் இதுவரை 4 லட்சத்து 93 ஆயிரத்து 881 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 4 லட்சத்து 43 ஆயிரத்து 534 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் 43 ஆயிரத்து 624 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் நோய் தொற்று குறைந்த போதிலும் உயிரிழப்பு கட்டுக்குள் வராமல் உள்ளது. நேற்று மாநிலம் முழுவதும் 474 பேர் பலியாகி இருக்கும் நிலையில் சென்னையில் 79 பேர் உயிரிழந்து உள்ளனர்.

சென்னையில், மார்ச் 22-ந்தேதி அன்று சென்னையில் தினசரி நோய் தொற்று 3 ஆயிரத்தை நெருங்கி இருந்தது. அன்று 2,985 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். அதையடுத்து நாளுக்கு நாள் அதிகரித்தா வந்த கொரோனா தொற்று,  77 நாட்களுக்கு பிறகு நேற்று ல் 3 ஆயிரத்துக்கும் குறைவான பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

சென்னையில் நோய் தொற்று குறைந்த போதிலும் உயிரிழப்பு கட்டுக்குள் வராமல் உள்ளது. நேற்று மாநிலம் முழுவதும் 474 பேர் பலியாகி இருக்கும் நிலையில் சென்னையில் 79 பேர் உயிரிழந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.