சென்னை:  தமிழகத்தில் இன்று மேலும் 746  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் கோவை தொடர்கிறது.

தமிழ்நாடு சுகாதாரத்துறை இன்று இரவு 7.30  மணி அளவில் வெளியிட்டுள்ள கொரோனா தகவலின்படி, மாநிலம் முழுவதும் இன்று 1,03,258  கொரோனா சோதனைகள் செய்யப்பட்டு உள்ளன. இதுவரை  5,38,67,315** சோதனைகள் செய்யப்பட்டு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும்  மேலும் 746  பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 27,23,991 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பலனின்றி  11   பேர் பலியான நிலையில், இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36,443  ஆக அதிகரித்துள்ளது.

இன்று மேலும்  759  பேர்  கொரோனா தொற்று சிகிச்சையில் இருந்து குணமடைந்துள்ளதால், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 26,79,130 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது மாநிலம் முழுவதும் 8,418  பேர் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எவரும் உயிரிழந்த நிலையில்,, இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 8604 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மேலும் 115 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 5.47.805ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1206 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்:

அரியலூர் 1
செங்கல்பட்டு 59
சென்னை 103
கோவை 113
கடலூர் 10
தர்மபுரி 9
திண்டுக்கல் 6
ஈரோடு 70
கள்ளக்குறிச்சி 1
காஞ்சிபுரம் 23
கன்னியாகுமரி 9
கரூர் 19
கிருஷ்ணகிரி 10
மதுரை 10
மயிலாடுதுறை 4
நாகப்பட்டினம் 7
நாமக்கல் 45
நீலகிரி 15
பெரம்பலூர் 0
புதுக்கோட்டை 1
ராமநாதபுரம் 0
ராணிப்பேட்டை 2
சேலம் 56
சிவகங்கை 5
தென்காசி 1
தஞ்சாவூர் 15
தேனி 2
திருப்பத்தூர் 3
திருவள்ளூர் 28
திருவண்ணாமலை 4
திருவாரூர் 9
தூத்துக்குடி 4
திருநெல்வேலி 6
திருப்பூர் 56
திருச்சி 22
வேலூர் 12
விழுப்புரம் 5
விருதுநகர் 1