வேலூர்:
11 மாதங்களில் 255 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக சமூகநலத் துறை, குழந்தைகள் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சமூகநலத் துறை, குழந்தைகள் பாதுகாப்பு மையம் வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில், கடந்த ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரை வேலூரில், 83,
திருப்பத்தூரில் 37, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 107, திருவண்ணாமலையில், 28 என மொத்தமாக 4 மாவட்டங்களில் 255 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.