சென்னை:
ன்று விடப்பட்டிருந்த மிக கனமழை எச்சரிக்கை திரும்பப் பெறப்படுவதாக தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதால் பல்வேறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் வழங்கிய மிக கனமழை எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டுவிட்டது. ‌ இந்நிலையில் நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையால் வழங்கப்பட்ட மிக கனமழை எச்சரிக்கைக்கான அறிவுரைகள் திரும்ப பெறப்படுகின்றன.