அயோத்தி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அயோத்தி ராமர் கோவிலில் 24 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட உள்ளன.

தீபாவளி என்றாலே தீபங்களின் வரிசை எனப் பொருளாகும். எனவே தீபாவளி என்றாலே வட இந்தியாவில் வீடு மற்றும் ஆலயங்களில் தீபங்கள் ஏற்றுவது வழக்கமாகும். ஒவ்வொரு வருடமும் இந்த தீபாவளி திருநாள் நாடெங்கும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இவ்வகையில் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது அயோத்தியில் மட்டும் சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமான அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. இந்த ஆண்டு 24 லட்சம் அகல் விளக்குகளை ஏற்றுவதற்கான பணியில் ஏராளமான தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கங்கை நதிக்கரை, அயோத்தி ராமர் கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கோவில்கள், மடங்கள் உள்ளிட்ட இடங்களில் விளக்குகளை ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளது.