டெல்லி:
ந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 6,48,315 ஆக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவமும் 210க்கும் மேற்பட்ட நாடுகளை சூறையாடி வரும் கொரோனா, இந்தியாவிலும் வெறித்தனமாக வேட்டையாடி வருகிறது. நாட்டில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த  24 மணி நேரத்தில் நாட்டில் 22,771 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதனால்  நாடு முழுவதும் கொரோனா  பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6லட்சத்து 48 ஆயிரத்து 315-ஆக அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக கொரோனா உயிரிழப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், நேற்று  442 பேர் பலியாகியுள்ளனர். இதனால்,  பலியானோர் மொத்த எண்ணிக்கை 18,655-ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்று பாதித்தவர்களில் 2,35,433 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து 3,94,227 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
நாட்டின் ஒட்டுமொத்த பாதிப்பில் மூன்றில் இருபங்கு பாதிப்பு, மகாராஷ்டிரம், தமிழகம், டெல்லி, குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ளது. மகாராஷ்டிரம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.