சென்னை:
மிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சூறாவளியாய் சுழற்றியடிக்கிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளோர்  மொத்த எண்ணிக்கை 1,07,001ஆக உயர்ந்துள்ளது.
இன்று பாதிப்புக்குள்ளான 4,280  பேரில் 1842 பேர் சென்னையை சேர்ந்தவர்கள்.
இன்று தமிழகம் முழுவதும்  2,214 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டுள்ளோர் எண்ணிக்கை  60,592 ஆக அதிகரித்து உளளது.
இன்று ஒரே நாளில் மேலும் 65 பேர் உயிரிழந்தையடுத்து, தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா நோய் காரணமாக உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1450 ஆக உயர்ந்துள்ளது.
வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 3,785 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வந்த 413 பேர், உள்நாட்டு விமானங்களில் இருந்து வந்த 359 பேர், ரயில், பேருந்து, சொந்த வாகனங்கள் மூலம் வந்த 3013 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ரயில், விமானம், பேருந்து மற்றும் இதர வாகனங்களில் தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 3,06,977-ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 94 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 12,49,317 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 100 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை ஆண்கள் 65,604 பேரும், பெண்கள் 41,375 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 22 பேரும் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.
தமிழகத்தில் 12 வயதிற்குள் 5277 பேரும், 13 வயதிலிருந்து 60 வயதிற்குள் 88847 பேரும், 60 வயதிற்கு மேல் 12877 பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.