சென்னை: கடந்த  அதிமுக ஆட்சியில் 22,000 சாலை விபத்து மரணங்கள் குறைத்து காண்பிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சாலை விபத்து குறைவு என கூறி மத்தியஅரசிடம் இருந்து விருது பெறும் வகையில், இந்த தில்லாலங்கடி வேலை நடைபெற்றுள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மத்தியஅரசிடம்  விருதுகள் பெறுவதற்காக கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் பல தில்லாலங்கடி வேலைகளும், முறைகேடுகளம் நடைபெற்றுள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.  கடந்த 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் சாலை விபத்து குறைவு என தமிழக அரசுக்கு மத்தியஅரசு சிறப்பு விருது வழங்க கவுரவித்தது. ஆனால்,  ஆனால் 2017-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை தமிழகத்தில் நடந்த சாலை விபத்தில் இறந்தவர்கள் தொடர்பான தரவுகளை மீண்டும் ஆய்வு செய்தபோது, அந்த 4 ஆண்டுகளில் மட்டும் ஏற்கனவே காட்டப்பட்டுள்ள விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கையை விடவும் 22 ஆயிரத்து 18 பேர் கூடுதலாக மரணம் அடைந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல்ஆய்வில் வெளியாகி உள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆய்வு மூலம் வெளியாகி உள்ள தகவலின்படி,  2017-ம் ஆண்டு 16 ஆயிரத்து 157 மரணம் காட்டப்பட்டிருந்த நிலையில், அது 17 ஆயிரத்து 926 ஆக இருக்கிறது. அதுபோல, 2018-ம் ஆண்டு 12 ஆயிரத்து 216 நடந்ததாக குறிப்பிடப்பட்டு இருந்த நிலையில், அது 18 ஆயிரத்து 394 ஆகவும், 2019-ம் ஆண்டு 10 ஆயிரத்து 525 அரங்கேறியதாக கூறிய நிலையில் அது 18 ஆயிரத்து 129 ஆகவும், 2020-ம் ஆண்டு கடுமையான ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் 8 ஆயிரத்து 60 என பதிவாகியதாக கூறப்பட்டிருந்த நிலையில் அது 14 ஆயிரத்து 527 ஆகவும் பலி எண்ணிக்கை புதிய ஆய்வின்படி அதிகரித்துள்ளது.

அதுபோல,  வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பாடத்திற்கான பட்டம் மற்றும் பட்டயப் படிப்பிற்கான கல்லூரி இதேபோல தமிழகத்தில் 2017-ம் ஆண்டு 15 ஆயிரத்து 61 ஆக இருந்த கோர விபத்துகளின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 911 ஆகவும், 2018-ம் ஆண்டு 11 ஆயிரத்து 375 ஆக இருந்த விபத்துகள் 17 ஆயிரத்து 388 ஆகவும், 2019-ம் ஆண்டு 9 ஆயிரத்து 813 ஆக இருந்த விபத்துகள் 17 ஆயிரத்து 196 ஆகவும், 2020-ம் ஆண்டு 7 ஆயிரத்து 560 ஆக இருந்த விபத்துகள் 13 ஆயிரத்து 868 ஆகவும் உயர்ந்திருப்பது மீண்டும் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக சாலை விபத்துகள் மட்டும் 2017-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரையிலான 4 ஆண்டுகளில் 12 சதவீதத்தில் இருந்து 83 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்த  தகவல்களை குறைத்து வழங்கியது யார் என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. அதிகாரிகளின் மெத்தனமா அல்லது ஆட்சியாளர்களின் தில்லாலங்கடி வேலையா, விருதுக்காக இவ்வளவு கீழ்த்தரமான வேலைகளில் ஈடுபடுவார்களா என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

தரவுகளில் வேறுபாடு காண்பிப்பதற்காக நாங்கள் வழக்கமாக ஆய்வு செய்து பார்த்தபோது இந்த தவறுகள் கண்டறியப்பட்டுள்ளன. வழக்கமான நடைமுறைப்படி, ஒவ்வொரு வழக்கையும் நாங்கள் ஆய்வு செய்தபோது இந்த வேறுபாடு தெரியவந்துள்ளது. சாலை விபத்துகள் மற்றும் அதனால் நிகழ்ந்த மரணம் தொடர்பான புதிய தரவுகள் மாநில அரசுக்கும், தேசிய குற்ற ஆவண காப்பகத்துக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.