சென்னை: தமிழ்நாட்டில் இன்று 22 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. இருந்தாலும், தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தமிழகஅரசு தெரிவித்துள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 34,53,033 ஆக உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில்  10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று எந்தவொரு கொரோனா உயிரிழப்பும் இல்லை. இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,025 ஆக தொடர்கிறது.

இன்று மேலும் 32 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 34,14,771 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது சிகிச்சையில் 237 பேர் உள்ளனர்.

மாநிலத்தில் இன்று 20,982 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 6,57,78,227 சோதனைகள் செய்யப்பட்டு உள்ளன.