ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25.78 கோடியாக உயர்ந்து 26 கோடியை நெருங்குகிறது. அதுபோல உயிரிழப்பும் 52 லட்சத்தை நெருங்குகிறது.

2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் உகான் நகரில் இருந்து பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் இரண்டு  ஆண்டுகளை நெருங்கிய நிலையிலும் உருமாற்றம் அடைந்து பல அலைகளாக தாக்கி வருகிறது. கொரோனா தொற்று பரவலில் இருந்து மக்களை பாதுகாத்துக்கொள்ள தபோதைய நிலையில், தடுப்பூசி மட்டுமே உள்ளது.  இதனால் மக்களுக்கு  தடுப்பூசி போடும் பணியை உலக நாடுகள்  முழு வீச்சில்  செயல்படுத்தி வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரிட்டன், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

இன்று காலை 7 மணி நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25.78 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 23.277 கோடியைத் தாண்டியது.

அதே வேளையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை   51.67 லட்சமாக உயர்நதுள்ளது. தற்போதைய நிலையில், உலகம் முழுவதும் 1.99 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இவர்களில் 79 ஆயிரத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.